Sunday, September 27, 2026
Homeசெய்திகள்தவெக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

தவெக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பட்டியல் வெளியீடு மற்றும் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதில் இன்னும் ஆலோசனைகள் நீடித்து வருவதால், இன்று வெளியாகவிருந்த பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று நடைபெறவிருந்த வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி வரும் 29-ஆம் தேதிக்கு (நாளை மறுநாள்) மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை வந்திருந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்ட தகவலையடுத்து ஏமாற்றத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர்.

வேட்பாளர் தேர்வில் எவ்வித பின்னடைவும் இருக்கக்கூடாது என்பதில் கட்சித் தலைமை தீவிரமாக இருப்பதால், 29-ஆம் தேதி முழுமையான பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments