Monday, April 6, 2026
Homeசெய்திகள்'விசில் வைத்தியம்'- பரப்புரைக் களத்தில் செங்கோட்டையன் கலகல!

‘விசில் வைத்தியம்’- பரப்புரைக் களத்தில் செங்கோட்டையன் கலகல!

தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்து வரும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், குழந்தைகளுக்கான சளித் தொல்லை குறித்துப் பேசிய வினோதமான மருத்துவக் குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக சளி பிடித்தால் மருந்து, மாத்திரைகளை நாடுவது வழக்கம். ஆனால், செங்கோட்டையனோ, “குழந்தைகளுக்குச் சளி பிடித்திருந்தால் ஒரு பெரிய விசிலைக் கொடுத்து ஊதச் சொன்னால் போதும், சளி நின்றுவிடும்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமன்றி, முதியவர்களுக்கும் மூச்சுப் பயிற்சி அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், விசிலை ஓங்கி ஊதும்போது இதயம் நன்றாகச் செயல்பட்டு (Pumping) ரத்த ஓட்டம் சீராகும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சைக் கேட்டு அங்கிருந்த தொண்டர்களும் மக்களும் கலகலவெனச் சிரித்தனர்.

மருத்துவரீதியாக இதற்கு ஆதாரங்கள் இல்லையென்றாலும், பரப்புரைக் களத்தில் செங்கோட்டையனின் இந்த ‘விசில் வைத்தியம்’ தற்போது பெரும் விவாதத்தையும் நகைச்சுவையையும் கிளப்பியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments