Friday, April 10, 2026
Homeசினிமாஇளைஞர்களுக்கு ரஜினிகாந்த் அட்வைஸ்!

இளைஞர்களுக்கு ரஜினிகாந்த் அட்வைஸ்!

“இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனது ஸ்டைலிலேயே இளைஞர்களுக்குத் தேவையான முக்கியமான வாழ்க்கைப் பாடங்களை இன்று (ஏப்ரல் 8, 2026) பகிர்ந்துள்ளார்.

நடிகர்களின் வாகனங்களைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்ட அவர், “அடிபட்டால் உங்களுக்குத்தான் பாதிப்பு, ஜாக்கிரதையாக இருங்கள்” என்று எச்சரித்துள்ளார்.

படிக்கும் வயதில் படிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த நேரத்தை தவறவிட்டால் பின்னாளில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் குடி மற்றும் கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களுக்கு ஒருபோதும் அடிமையாகிவிட வேண்டாம் என்றும், அத்தகைய பழக்கம் கொண்ட நண்பர்களிடமிருந்து தள்ளி இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போதை என்பது தனிமனிதனை மட்டுமல்லாமல், அவரைச் சுற்றியுள்ள குடும்பத்தையும் நரகமாக்கிவிடும் என்று ரஜினி தனது பேட்டியில் மிக உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments