Friday, April 17, 2026
Homeஉலகம்நெட்பிளிக்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் ரீட் ஹேஸ்டிங்ஸ்.. காரணம் என்ன?

நெட்பிளிக்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் ரீட் ஹேஸ்டிங்ஸ்.. காரணம் என்ன?

சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு நெட்பிளிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி, உலகளவில் ஓடிடி தளங்களின் போக்கையே மாற்றியமைத்த அதன் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ், தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விலகுகிறார்.

சமீபகாலமாக அதிகரித்து வரும் கடும் போட்டி மற்றும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால் நிறுவனத்தின் வளர்ச்சி மந்தமடைந்துள்ள நிலையில், புதிய உத்திகள் மற்றும் மாற்றங்களை நோக்கி நெட்பிளிக்ஸ் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான புதிய வழிகளைக் கண்டறியும் முயற்சியின் ஒரு பகுதியாகவே, இணை நிறுவனரான ரீட் ஹேஸ்டிங்ஸின் இந்த விலகல் பார்க்கப்படும் சூழலில் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகும் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 9 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளன.

இதற்கிடையில், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 14 பக்க பங்குதாரர் கடிதத்தில், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளுக்கு ஏற்ப திரைப்படங்கள் மற்றும் தொடர்களை வழங்கி உலகத்தையே மகிழ்விக்கும் தனது தற்போதைய உத்தியில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை நெட்பிளிக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி கிரெக் பீட்டர்ஸ் கூறுகையில், கடந்த ஆண்டின் இறுதியில் நெட்பிளிக்ஸ் 32.5 கோடிக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக சுமார் 100 கோடி மக்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையை எட்டியிருந்தாலும், சந்தையில் இன்னும் விரிவடைந்து வளர தங்களுக்குப் போதுமான வாய்ப்புகள் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments