சூரியன் வழிபட்ட பனையபுரம் சிவன் -அறந்தாங்கி சங்கர்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் அந்த இறைவன் எம்பெருமான் சிவபெருமான் பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு பெயர்களிலேயே அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்..
அப்படிப்பட்ட ஒரு அற்புதமான திருத்தலமாம் பனையபுரம் திருக்கோவிலை பற்றி தான் இந்த பதிவிலே நாம் பார்க்க போகிறோம்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் உள்ள பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் (ஸ்ரீபுறவார் பனங்காட்டூர்) தேவாரப் பாடல் பெற்ற (52-வது) பழமையான சிவத்தலமாகும்.
சூரியன் வழிபட்ட தலமான இங்கு, இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
பனை மரம் தல விருட்சமாக உள்ள இக்கோயில், சூரிய பூஜை மற்றும் சித்திரை மாத சூரிய ஒளி விழாவிற்குப் புகழ்பெற்றது.
மூலவர் பனங்காட்டீஸ்வரர் (புறவார் பனங்காட்டு ஈஸ்வரர்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்..
அம்பாள் சத்யாம்பிகை (புறவம்மை, மெய்யாம்பிகை) என்ற பெயரில் வழங்கப்படுகிறார்..
சித்திரை முதல் வாரத்தில் சூரிய ஒளி இறைவன் மற்றும் இறைவி மீது விழும் அதிசயத் தலம்.
சூரியன் இழந்த தனது ஒளியை மீட்ட தலம் இந்த பனையபுரம் திருத்தலம்.
அற்புதமான இந்த ஆலயம் விழுப்புரம் – சென்னை நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், முண்டியம்பாக்கம் அருகே உள்ளது.
காலை 6:00 – 11:00, மாலை 4:00 – 8:30. நேரங்களில் இந்த திருக்கோவில் திறந்திருக்கும்.. ஆன்மீக நண்பர்கள் சென்று சிவனை தரிசனம் செய்து வாழ்வில் வளமும் நலமும் பெறலாம்..
அறந்தாங்கி சங்கர்
9080488624

