Friday, April 24, 2026
Homeசெய்திகள்சென்னை 2026 தேர்தலில் 83.7% வாக்குப்பதிவு – சுத்திகரிக்கப்பட்ட பட்டியலில் உயர்ந்த பங்கேற்பு!

சென்னை 2026 தேர்தலில் 83.7% வாக்குப்பதிவு – சுத்திகரிக்கப்பட்ட பட்டியலில் உயர்ந்த பங்கேற்பு!

சென்னை மாவட்டத்தின் தேர்தல் வரலாற்றில் இந்த 2026 வாக்குப்பதிவு ஒரு விசித்திரமான அதேசமயம் ஆரோக்கியமான மாற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

கடந்த காலங்களில் 60 சதவீதத்தைத் தாண்டவே திணறிய தலைநகர் சென்னை, இம்முறை 83.7% என்ற இமாலயப் பதிவை எட்டியுள்ளது. இருப்பினும், எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் 2021-ல் வாக்களித்த 24.16 லட்சம் பேரை விட, இம்முறை 23.69 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

இந்த முரண்பாட்டிற்கு முக்கியக் காரணம், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட S.I.R (சுத்திகரிப்பு – புலனாய்வு) நடவடிக்கையாகும். போலிப் பெயர்கள் மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்ட பிறகு, சென்னையின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 28 லட்சமாகக் குறைந்தது.

இவ்வாறு பட்டியல் சரிசெய்யப்பட்டதால், தற்போதுள்ள ‘உண்மையான’ வாக்காளர்களில் 83 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஜனநாயகக் கடமையை ஆற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது சென்னையின் உண்மையான அரசியல் விழிப்புணர்வையும், தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை யையும் ஒருசேரப் பறைசாற்றுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments