விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்துள்ள ‘அனபெல் சேதுபதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘அனபெல் சேதுபதி’. இதில் விஜய் சேதுபதி, டாப்ஸி, யோகி பாபு, ராதிகா, மதுமிதா, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முழுக்க காமெடி ஹாரர் பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன.
‘அனபெல் சேதுபதி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 17-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

