“நாங்கள் மக்கள் தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்கிறோம். இந்தத் தீர்ப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கான (தவெக) வெற்றி மட்டுமல்ல; இது முதலமைச்சர் விஜய் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி. அவர் முதலமைச்சராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருந்துள்ளது.
அதற்கேற்ப முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர் தலைமையிலான தவெக அரசுக்கு எங்களது முழுமையான ஆதரவையும் வழங்குகிறோம்” என்று அதிமுகவின் மூத்த தலைவர் சி.வி. சண்முகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
தவெக அரசுக்கு அதிமுக ஆதரவளிக்கும் இந்த அதிரடி முடிவு, தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சி.வி. சண்முகம் தலைமையிலான அணியினர் தவெக-விற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் மீதான மக்களின் நம்பிக்கையை மதிப்பதே தங்களின் நோக்கம் என்பதையும் அவர் தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

