சட்டமன்றத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மற்றும் தான் ஆகிய இருவருமே ஒரே கல்லூரியில் (லயோலா கல்லூரி) பயின்றவர்கள் என்ற சுவாரசியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
“நானும் முதலமைச்சர் அவர்களும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்; அப்படி ஒன்றாகப் படித்திருந்தாலும், அரசாங்கத்தை நடத்திய அனுபவத்தில் நாங்கள் ‘திமுக சீனியர் பேட்ச்’ (Senior Batch)” என்று அவர் கலகலப்பாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆட்சி நிர்வாகத்தில் தங்களுக்கு இருக்கும் அந்த அறிவையும், அனுபவத்தையும் புதிய அரசுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் பெருந்தன்மையுடன் தெரிவித்தார்.
ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நிலவும் இந்த ஆரோக்கியமான நட்பு மற்றும் அனுபவப் பகிர்வு குறித்த பேச்சு, அவையில் இருந்த உறுப்பினர்களிடையே நெகிழ்ச்சியையும் புன்னகையையும் ஏற்படுத்தியது.

