தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர்கள் மற்றும் பதாகைகள் வைப்பதற்குத் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் கடும் தடை விதித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலனை முன்னிறுத்தி மிகப் பெரிய பொறுப்பை வழங்கியுள்ள நிலையில், கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் அல்லது குடும்ப விழாக்கள் தொடர்பாகச் சாலைகளிலோ, மக்கள் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எவ்வித பேனர்களையும் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறாகக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் வெளிப்படையான மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியலை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அதிரடி உத்தரவு வெளியாகியுள்ளது.

