கட்சி தொடங்கி முதலமைச்சர் வரை: விஜய் படைத்த புதிய சாதனை!
தெலுங்குத் திரையுலகின் ஜாம்பவானான என்.டி. ராமரா வ், 1982-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி ‘தெலுங்கு தேசம்’ கட்சியைத் தொடங்கினார். கட்சி ஆரம்பித்த வெறும் 286 நாட்களில், அதாவது ஜனவரி 9, 1983 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியல் வரலாற்றையே அதிரவைத்தார்.
அவரைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் மூலம் உருவான ‘ஆம் ஆத்மி’ கட்சியை 2012-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார். அவர் கட்சி தொடங்கிய 397 நாட்களில், அதாவது 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி டெல்லி மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, தளபதி விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய 828 நாட்களில் முதலமைச்சராகிப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். முன்னதாக, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய 1717 நாட்களிலும், பேரறிஞர் அண்ணா திமுகவைத் தொடங்கிய 6379 நாட்களிலும் தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

