Wednesday, May 20, 2026
Homeசெய்திகள்"தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம்"ரூ.677 கோடி செலவு: தமிழக அரசுக்கு புதிய பொருளாதார சுமையா?

“தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம்”ரூ.677 கோடி செலவு: தமிழக அரசுக்கு புதிய பொருளாதார சுமையா?

தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தமிழக வெற்றி கழகம் (TVK) அறிவித்துள்ளதாக கூறப்படும் ‘தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம்’ தற்போது அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்திருந்தாலும், உலகளாவிய பொருளாதார மந்தநிலை அச்சம், தங்க விலையின் தொடர்ச்சியான உயர்வு, இறக்குமதி செலவுகளின் அதிகரிப்பு போன்ற சூழ்நிலைகளில் இது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி கூட சமீபத்தில் தேவையற்ற தங்க வாங்குதலைத் தவிர்க்க வேண்டும் என எச்சரித்திருந்த நிலையில், தமிழகத்தில் 2024-25 ஆண்டில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் பதிவான 4,51,547 குழந்தைப் பிறப்புகளின் அடிப்படையில் கணக்கிட்டால், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க ஆண்டுதோறும் மாநில அரசுக்கு சுமார் ரூ.677 கோடி வரை செலவாகும் என பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். தங்கத்தின் விலை மேலும் உயர்ந்தால் இந்தச் செலவு இன்னும் அதிகரிக்கும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடன் சுமை, நிதிப் பற்றாக்குறை மற்றும் பல்வேறு நலத்திட்டச் செலவுகளால் அழுத்தத்தில் உள்ள மாநில அரசின் பொருளாதார நிலையைப் பார்க்கும்போது, இப்படிப்பட்ட திட்டத்தை நீண்டகாலமாக செயல்படுத்துவது கடினமாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேசமயம் ஆதரவாளர்கள் இதை குடும்ப உறவுகளையும் தமிழர் பாரம்பரியத்தையும் முன்னிறுத்தும் உணர்ச்சி சார்ந்த திட்டமாக பாராட்டினாலும், விமர்சகர்கள் இதை நடைமுறைக்கு ஒத்தாத ‘வாக்கு கவர்ச்சி அறிவிப்பு’ என குற்றம்சாட்டி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments