Saturday, June 13, 2026
Homeசெய்திகள்அஞ்சலியா? வியாபாரமா? பாரதிராஜாவின் கடைசி காணொளி வெளியீட்டைச் சுற்றி சர்ச்சை!

அஞ்சலியா? வியாபாரமா? பாரதிராஜாவின் கடைசி காணொளி வெளியீட்டைச் சுற்றி சர்ச்சை!

தமிழ் திரையுலகில் மாபெரும் ஆளுமைகள் அல்லது பிரபலங்கள் யாராவது மறைந்துவிட்டால், உடனடியாக தங்களின் பெட்டகத்தில் இருக்கும் பழைய பதிவுகளைத் தோண்டி எடுத்து, “இதுதான் அன்னாரின் கடைசி வீடியோ, கடைசிப் பேட்டி” என்று பிரம்மாண்டமாகப் தம்பட்டம் அடித்து விளம்பரம் தேடிக் கொள்வதில் அண்ணாசாலை அப்பள நிறுவனத்துக்கு எப்போதும் ஒரு தனி குஷிதான்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் த்ஆழ்த்தியுள்ள வேளையில், அவரது ஆன்மாவிற்குத் தார்மீக மரியாதையைச் செலுத்துவதை விட்டுவிட்டு, கடந்த ஏப்ரல் 30 அன்று எடுக்கப்பட்ட அவரது இறுதி நிமிடக் காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுத் தங்களின் ‘வியாபாரப் பெருமை’யைப் பேசும் இத்தகைய போக்கை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஒரு மரணத்தின் துயரத்தைக் கூட தங்களின் ்ன் நிறுவனத்திற்கான பார்வையாளர்கள் (Views) மற்றும் விளம்பரங்களுக்கான முதலீடாக மாற்றத் துடிக்கும் இந்த ஊடக பரபரப்பு கலாச்சாரம், பத்திரிகை தர்மத்தின் மீதான நன்மதிப்பைக் கேள்விக்குறியாக்குவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments