Monday, June 15, 2026
Homeசெய்திகள்ஜூன் மாத உரிமைத் தொகை இன்று வழங்கப்பட்டது – தவெக அரசின் இரண்டாவது மாத சாதனை!

ஜூன் மாத உரிமைத் தொகை இன்று வழங்கப்பட்டது – தவெக அரசின் இரண்டாவது மாத சாதனை!

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, நடப்பு ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000-ஐ பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று வெற்றிகரமாக வரவு வைத்துள்ளது.

முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தை புதிய தவெக அரசும் தொடர்ந்து செயல்படுத்தி வரும் நிலையில், தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து இரண்டாவது மாதமாக (மே மாதத்தைத் தொடர்ந்து தற்போதும்) இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அத்திட்டத்திற்கான மறுசீரமைப்பு மற்றும் கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதனால், அந்தப் புதிய திட்டம் தொடங்குவதற்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், தற்போதைக்கு வழக்கமான நடைமுறைப்படி மாதந்தோறும் 15 ஆம் தேதியான இன்று, 1.31 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை தங்குதடையின்றி வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments