தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழக சட்டமன்றத்திற்கு வருகை புரிந்தனர்.
அப்போது, தங்களின் சட்டைகளில் “வாயை திறங்க CM” என்ற வாசகங்கள் அடங்கிய பேட்ஜ்களை அவர்கள் குத்தியிருந்ததோடு, கைகளில் பல்வேறு கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் (Placards) ஏந்தியவாறு சட்டமன்ற வளாகத்தில் திரண்டு அதிரடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சியினரின் அந்தப் பதாகைகளில், “தூய சக்தி அல்ல துயர சக்தி”, “கதறல் கேட்குதா CM?”, “திரையில் நாயகன், தரையில் வில்லன்”, “REELS இங்கே REALS எங்கே?”, “மாற்றம் அல்ல இது ஏமாற்றம்” மற்றும் “வாயில் ஏதாவது வருமா CM?” போன்ற மிகக் காரசாரமான முழக்க வாசகங்கள் இடம்பெற்றிருந்தன;
ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற வளாகத்திற்குள்ளேயே தி.மு.க எம்.எல்.ஏக்கள் நடத்திய இந்தத் திடீர் போராட்டம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

