Wednesday, June 24, 2026
Homeசெய்திகள்மக்கள் துயரம் ஒரு பக்கம்... பிறந்தநாள் கொண்டாட்டம் மறுபக்கம்? சர்ச்சையில் விஜய்!

மக்கள் துயரம் ஒரு பக்கம்… பிறந்தநாள் கொண்டாட்டம் மறுபக்கம்? சர்ச்சையில் விஜய்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று தலைமைச் செயலகக் கோட்டையில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து கூற கேக்குடன் வந்த போது, “அம்மோனியா வாயு கசிவு பாதிப்பால் பொதுமக்கள் பலர் உயிரிழந்தும் பாதிக்கப்பட்டும் துயரத்தில் இருக்கும் இந்தச் சூழலில், எனக்கு எந்தவிதக் கேக் வெட்டும் கொண்டாட்டங்களும் வேண்டாம்” என்று கூறி முதலமைச்சர் அதனைத் திருப்பி அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகின.

அதே நேரத்தில், முதலமைச்சரின் நெருங்கிய தோழியும் நடிகையுமான த்ரிஷா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நள்ளிரவு 00:00 மணிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் கேக் முன்பு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “To the person who makes it all worth it, HBD 💖🧿” என்று பதிவிட்டுள்ளார்.

ஒருபுறம் மக்கள் துயரத்தைக் காரணம் காட்டி அதிகாரிகள் கொண்டு வந்த கேக்கை கோட்டையில் முதலமைச்சர் மறுத்ததாகக் கூறப்பட்ட நிலையில், மறுபுறம் நெருக்கமான வட்டத்தில் பிறந்தநாள் கேக் கொண்டாட்டம் நடைபெற்றதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை த்ரிஷா தற்போது பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படம் மற்றும் பதிவு, அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பலத்த சர்ச்சையையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments