Thursday, June 25, 2026
Homeசெய்திகள்தங்க மோதிரம் வழங்கும் திட்டம்: TNMSC-க்கு ஏன் ஒப்படைக்கப்பட்டது?

தங்க மோதிரம் வழங்கும் திட்டம்: TNMSC-க்கு ஏன் ஒப்படைக்கப்பட்டது?

தமிழ்நாடு அரசு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ (Thaimaaman Thanga Mothiram Thittam) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஓராண்டிற்குச் சுமார் 4.42 லட்சம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்க 755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்துப் பொதுச் சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மத்தியில் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளுக்குத் தரமான மருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக 1990-களில் தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு மருத்துவச் சேவக் கழகம்’ (TNMSC) அமைப்பிடம், தற்போது இந்தத் தங்க மோதிரங்களை வாங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே தற்போதைய அவசரத் தேவை என்று குறிப்பிடும் சுகாதாரத் துறை அதிகாரிகள், தங்க மோதிரங்களைக் கொள்முதல் செய்வது தமிழ்நாடு மருத்துவச் சேவக் கழகத்தின் (TNMSC) வேலை கிடையாது என்றும், இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் நீண்ட நெடிய அனுபவமும், அதற்கான தனித்துவமான அதிகாரமும் கொண்ட ‘சமூக நலத்துறை’ (Social Welfare Department) வசம் இத்திட்டத்தை ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என்றும், அவர்கள் தங்களின் பணிகளை எப்போதும் மிகச் சிறப்பாகச் செய்வார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments