Monday, June 29, 2026
Homeசெய்திகள்தமிழக அரசின் புதிய உத்தரவு: மனமகிழ் மன்றங்களுக்கு கடும் கட்டண உயர்வு!

தமிழக அரசின் புதிய உத்தரவு: மனமகிழ் மன்றங்களுக்கு கடும் கட்டண உயர்வு!

தமிழ்நாட்டில் இயங்கி வரும் எஃப்எல்-2 (FL-2) வகை மனமகிழ் மன்றங்களுக்கான (Recreation Clubs) சிறப்புக் கட்டணத்தை அதிரடியாக இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதன்படி, மாநிலத்தில் புதிய மனமகிழ் மன்றங்களைத் தொடங்குவதற்குக் கட்டப்பட வேண்டிய சிறப்புக் கட்டணம் இதுவரை 15 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், அது தற்போது 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு இதற்கான அதிகாரப்பூர்வ அரசிதழ் (Gazette) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதிரடி கட்டண உயர்வுடன் சேர்த்து, மதுபான உரிமத்திற்கான (Liquor License) விண்ணப்பக் கட்டணமும் 10,000 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் வருவாயைப் பெருக்கவும், மதுபானக் கூடங்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்தத் திடீர் உத்தரவு மனமகிழ் மன்றங்களின் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments