Thursday, July 2, 2026
Homeவணிகம்கோகோ கோலா, பெப்சிக்கு போட்டியாக ITC!

கோகோ கோலா, பெப்சிக்கு போட்டியாக ITC!

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஐடிசி (ITC), கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற உலகளாவிய குளிர்பான நிறுவனங்களுக்குப் போட்டியாக, தனது ‘பி நேச்சுரல்’ (B Natural) பிராண்டின் கீழ் புத்தம் புதிய பிரீமியம் ‘கோகனட் கோலா’ (Coconut Cola) பானத்தை அறிமுகம் செய்து சாஃப்ட் ட்ரிங்க்ஸ் சந்தையில் நேரடியாகக் களம் இறங்கியுள்ளது.

இளநீர் மற்றும் கோலா சுவையை ஒன்றிணைத்து, சர்க்கரை மற்றும் கஃபைன் இல்லாத ஆரோக்கியமான தயாரிப்பாக (Sugar-free & Caffeine-free) உருவாக்கப்பட்டுள்ள இந்த பானம், உடல்நலனில் அக்கறை காட்டும் தற்கால வாடிக்கையாளர்களைக் குறிவைத்து முதல்கட்டமாக பிளின்கிட், ஜெப்டோ போன்ற குவிக் காமர்ஸ் ஆன்லைன் தளங்கள் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘கம்பா கோலா’ பட்ஜெட் விலையில் சந்தையை அதிர வைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஐடிசி நிறுவனம் 250 மில்லி கேன் விலையை 60 ரூபாய் என பிரீமியம் பிரிவில் நிர்ணயித்து, ஆரோக்கியமான மாற்றுப் பானங்களைத் தேடும் நகர்ப்புற நுகர்வோரைக் கவர திட்டமிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments