Tuesday, July 7, 2026
Homeஉலகம்ஏஐ ஆசிரியர்களுக்கு அமெரிக்க பணக்காரர்களின் வரவேற்பு… ஆண்டுக்கு ₹64 லட்சம் வரை கல்விக் கட்டணம்!

ஏஐ ஆசிரியர்களுக்கு அமெரிக்க பணக்காரர்களின் வரவேற்பு… ஆண்டுக்கு ₹64 லட்சம் வரை கல்விக் கட்டணம்!

அமெரிக்காவின் பெரும் பணக்காரக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஏஐ (AI) சாஃப்ட்வேர்களுக்காக மட்டுமே வருடத்திற்கு 75,000 டாலர் வரை வாரி இறைக்கத் தொடங்கியுள்ளன.

‘ஆல்ஃபா’ (Alpha) மற்றும் ‘ஃபோர்ஜ் பிரெப்’ (Forge Prep) போன்ற நவீன பள்ளிகள் மனித ஆசிரியர்களைக் கொண்ட வகுப்பறைகளுக்குப் பதிலாக, முழுமையாக ஏஐ ட்யூட்டர்கள் மற்றும் பிராஜெக்ட் சார்ந்த பயிற்சிப் பட்டறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

தற்போதைய பாரம்பரியக் கல்வி முறை முற்றிலும் உடைந்துபோய்விட்டதாகக் குறிப்பிடும் சிலிக்கான் வேலி முதலீட்டாளர் ஒருவர், ஆல்ஃபா பள்ளியின் 75,000 டாலர் கட்டண மழலையர் வகுப்பில் (Kindergarten) தனது மகனைச் சேர்த்துள்ளார்.

உயர்நிலைப் பள்ளி வரை நீளும் இந்த ஏஐ கல்வி முறையில், சமூகம் சார்ந்த சர்ச்சைக்குரிய தேவையற்ற கருத்துக்கள் எதுவும் பாடங்களில் புகுத்தப்படாமல் கவனமாகத் தவிர்க்கப்படுவதாக ஆல்ஃபா பள்ளியின் இணை நிறுவனர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments