Wednesday, July 8, 2026
Homeசெய்திகள்ஆரோக்யா பால், தயிர் விலை லிட்டருக்கு ₹4 வரை உயர்வு... நாளை முதல் அமல்!

ஆரோக்யா பால், தயிர் விலை லிட்டருக்கு ₹4 வரை உயர்வு… நாளை முதல் அமல்!

இந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான ‘ஆரோக்யா’ (Arokya), அதன் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ₹4 வரை அதிரடியாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நிலவி வரும் பால் உற்பத்திச் சரிவு மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை வாங்குவதற்கான கொள்முதல் செலவுகள் அதிகரித்துள்ளது போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த புதிய விலை உயர்வு நாளை (ஜூலை 9) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், இது நுகர்வோர் மற்றும் இல்லத்தரசிகளின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனப் பரவலான கவலை எழுந்துள்ளது.

ஆரோக்கியா நிறுவனத்தின் இந்த விலையேற்றத்தைத் தொடர்ந்து, சந்தையிலுள்ள இதர முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments