Tuesday, July 21, 2026
Homeசெய்திகள்முதல்வர் விஜய் அலுவலகம் 10-வது தளத்திற்கு மாற்றமா? – தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

முதல்வர் விஜய் அலுவலகம் 10-வது தளத்திற்கு மாற்றமா? – தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

சென்னை தலைமைச் செயலகக் கோட்டைப் பாரம்பரியக் கட்டிடத்தில் இயங்கி வரும் முதல்வர் விஜய் அலுவலகத்தை, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள 10 மாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு இடமாற்றம் செய்வது தொடர்பாக ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

தினந்தோறும் உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் வந்து செல்லும் சூழலில், தற்போதைய அலுவலகத்தில் இடநெருக்கடி ஏற்படுவதால் 10-வது தளத்திலுள்ள கருத்தரங்கக் கூடம் உள்ளிட்ட பகுதிகளைப் புதுப்பித்து முழுமையாகச் செயலகமாக மாற்றத் திட்டமிடப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த இடமாற்றத்தின் பின்னணியில் வாஸ்து மற்றும் ஜோதிட ஆலோசனைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது;

அதாவது, தற்போதைய அறை வாஸ்துபடி சரியாக இல்லை என்றும், ‘அரசியலில் தொடர்ந்து உச்சத்தில் இருக்க வேண்டுமென்றால் உயரமான கட்டிடத்தில் இருந்து முதல்வர் அலுவலகம் செயல்பட வேண்டும்’ என்றும் ஆஸ்தான ஜோதிடர் அறிவுறுத்தியதன் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பேசப்படுகிறது; இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவுகள் எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments