Wednesday, July 22, 2026
Homeசெய்திகள்அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சாதாரண ரகப் பொன்னி அரிசி கிலோ ரூ.52-லிருந்து ரூ.60 ஆகவும், சன்னரக அரிசி ரூ.64-லிருந்து ரூ.75 ஆகவும், இட்லி அரிசி ரூ.43-லிருந்து ரூ.50 ஆகவும் உயர்ந்துள்ளதுடன், 26 கிலோ அரிசி மூட்டைக்கு ரூ.250 முதல் ரூ.400 வரை விலை அதிகரித்திருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

குறுவை சாகுபடி குறைகாட்டி வியாபாரிகள் செயற்கையாக விலையை உயர்த்தியிருக்கக் கூடும் எனக் குறிப்பிட்ட அவர், அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவும், வணிகர்களின் கை இருப்பிற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அரிசி ஆலைகள் மற்றும் மொத்த வணிகர்களிடம் உள்ள அரிசியில் 20 சதவீதத்தை அடக்க விலைக்குக் கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments