Thursday, July 23, 2026
Homeசெய்திகள்கோட்டைக்கு வராத முதல்வர் விஜய்… செயலகத்தில் பரபரப்பு!

கோட்டைக்கு வராத முதல்வர் விஜய்… செயலகத்தில் பரபரப்பு!

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்திற்கு வரவில்லை என்ற தகவல் பரவியதும், கோட்டை வட்டாரத்தில் “அட, தளபதிக்கு இன்னைக்கு என்ன ஆச்சு?” என அதிகாரிகளும் ஊழியர்களும் சற்று ஆச்சரியமடைந்து விசாரித்த நிலையில், பின்னணியில் ஒரு சுவாரசியமான விஷயம் சொல்லப்படுகிறது.

வழக்கமாகத் தினமும் காலை நேரத்தில் சுறுசுறுப்பாகக் கோட்டைக்கு வந்து கோப்புகளில் கையெழுத்திடும் முதலமைச்சர், இன்று தலைமைச் செயலகத்திற்கு வராமல் தனது முகாம் அலுவலகத்திலிருந்தபடியே முக்கிய நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடிச் செயலகப் பணிகளைக் கவனித்து வருகிறார்.

“ஒருவேளை ‘ஜன நாயகன்’ படத்தின் ரிலீஸ் கொண்டாட்டங்களை டிவியிலேயே பார்த்து மகிழ்கிறாரோ என்னவோ!” என்று செயலக ஊழியர்கள் ஜாலியாகப் பேசிக்கொள்ள, “அட ஆமாங்க, இன்னிக்கு கோட்டைக்கு வந்தாலும் பலர் ஜனநாயகன் பத்தியே பேசுவாங்க- என்பதாலும் வரலை’’ என்கிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments