Monday, July 27, 2026
Homeசெய்திகள்MBBS, BDS சேர்க்கை... இன்று மதியம் 3 மணி வரை மட்டுமே அவகாசம்!

MBBS, BDS சேர்க்கை… இன்று மதியம் 3 மணி வரை மட்டுமே அவகாசம்!

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் இன்று மதியம் 3:00 மணியுடன் நிறைவடைகிறது.

மருத்துவச் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை https://tnmedicalselection.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எந்தவித திருத்தமோ அல்லது மாற்றங்களோ செய்ய இயலாது என்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெளிவுபடுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் இதுவரை 70,485 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், விடுபட்ட மாணவர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி இன்றைக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments