Friday, September 18, 2026
Homeசெய்திகள்காவிரி உரிமை முதல் பயிர்க்கடன் தள்ளுபடி வரை: தஞ்சையில் திமுகவின் மாபெரும் போராட்டம்!

காவிரி உரிமை முதல் பயிர்க்கடன் தள்ளுபடி வரை: தஞ்சையில் திமுகவின் மாபெரும் போராட்டம்!

விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் இன்று பிரம்மாண்டக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

காவிரி நீர் உரிமையைப் பாதுகாத்தல், மேகேதாட்டு அணை விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடு எடுத்தல், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை உரிய நேரத்தில் திறக்காததால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்குதல் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் ஆளும் தவெக அரசு காலந்தாழ்த்தி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள திமுக, விவசாயிகள் சந்தித்து வரும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணாவிட்டால் போராட்டங்கள் மாநிலம் தழுவிய அளவில் மேலும் தீவிரமடையும் என எச்சரித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments