Friday, September 18, 2026
Homeசெய்திகள்அண்ணா சாலையில் பிரம்மாண்ட மேம்பாலம்: நவம்பரில் திறப்பு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!

அண்ணா சாலையில் பிரம்மாண்ட மேம்பாலம்: நவம்பரில் திறப்பு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!

சென்னையின் அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு வரும் 3.2 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் 70 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நவம்பர் மாத இறுதிக்குள் இதைத் திறக்க மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

இயக்கத்தில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைக்கு மேல் நேரடியாகக் கட்டப்படும் நாட்டின் முதல் உயர்மட்ட மேம்பாலம் என்ற பெருமையைப் பெறும் இத்திட்டம், சுமார் ₹621 கோடி மதிப்பீட்டில் அதிநவீன எஃகு உதிரிபாகங்களைக் கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்போது, தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையிலான பயண நேரம் 30 நிமிடங்களில் இருந்து வெறும் 5 நிமிடங்களாகக் குறைவதுடன், எல்டாம்ஸ் சாலை, நந்தனம் மற்றும் சி.ஐ.டி நகர் உட்பட 7 முக்கியச் சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

கடந்த ஏப்ரலில் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதாலும், இரவு நேரத்தில் 6 மணி நேரம் மட்டுமே பணிபுரிய அனுமதி இருந்ததாலும் ஏற்பட்ட தாமதங்கள் தற்போது சரிசெய்யப்பட்டு பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments