Monday, August 10, 2026
Homeவணிகம்வீடு விற்பனையில் ஹைதராபாத் முதலிடம்! ₹4.78 லட்சம் கோடி விற்பனை!

வீடு விற்பனையில் ஹைதராபாத் முதலிடம்! ₹4.78 லட்சம் கோடி விற்பனை!

2021 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் விற்பனையான வீடுகளின் ஒட்டுமொத்த மதிப்பின் அடிப்படையில் முன்னணி 10 நகரங்களின் தரவரிசைப் பட்டியலை இந்தத் தரவு வெளிப்படுத்துகிறது.

இதில் ₹4,77,977 கோடி மதிப்பிலான விற்பனையுடன் ஹைதராபாத் முதலிடத்தைப் பிடித்து சாதனையைப் படைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து மும்பை ₹4,51,811 கோடியுடன் இரண்டாம் இடத்தையும், பெங்களூரு ₹3,92,047 கோடியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

அடுத்தடுத்த இடங்களில் முறையே குருகிராம் (₹3,30,964 கோடி), அகமதாபாத் (₹2,91,765 கோடி – காந்திநகர் உட்பட), புனே (₹2,82,293 கோடி – PMC & PCMC உட்பட), மற்றும் தானே (₹1,71,012 கோடி – நவி மும்பை உட்பட) ஆகியவை உள்ளன.

மேலும், நொய்டா ₹1,35,388 கோடியுடன் எட்டாவது இடத்தையும், சென்னை ₹95,206 கோடியுடன் ஒன்பதாவது இடத்தையும், கொல்கத்தா ₹72,927 கோடியுடன் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

அடுக்குமாடி குடியிருப்புகள், தனித் தளங்கள் (Independent Floors) மற்றும் தனி வீடுகளின் (Villas) முதல்நிலை விற்பனையை (Primary Sales) மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments