Homeசெய்திகள்தமிழகக் கடலோர மீன்களில் ஈயம், துத்தநாகம் உள்ளிட்ட நச்சு உலோகங்கள்! காசிமேடு முதல் வேளாங்கண்ணி வரை...

தமிழகக் கடலோர மீன்களில் ஈயம், துத்தநாகம் உள்ளிட்ட நச்சு உலோகங்கள்! காசிமேடு முதல் வேளாங்கண்ணி வரை அதிர்ச்சி ஆய்வு – மீன் பிரியர்களே கவனம்!

தமிழ்நாட்டின் நான்கு முக்கிய மீன்பிடி இறங்குதளங்களில் பிடிக்கப்படும் மீன்களில் ஈயம் (Lead), துத்தநாகம் (Zinc), தாமிரம் (Copper) மற்றும் இரும்பு (Iron) ஆகிய கனரக உலோகங்களின் அளவு அபாயகரமான அளவிற்கு அதிகமாக இருப்பதாக ‘டிஸ்கவர் என்விரான்மென்ட்’ (Discover Environment) ஆய்விதழில் வெளியாகியுள்ள புதிய அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பிடிக்கப்படும் மீன்களில் 1.35 mg/L துத்தநாகமும், 0.30 mg/L ஈயமும் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மல்லிப்பட்டினத்தில் மீன்களில் இரும்பு (7.94 mg/L) மற்றும் தாமிரம் (0.13 mg/L) அதிகமாகவும், உப்பனாறு கடற்கரைப் படிமங்களில் ஈயத்தின் அளவு அதிகமாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அயிலை (Indian mackerel), வெள்ளை வாவல் (Silver pomfret), மத்தி (Indian oil sardine), கிழங்கான் (Silver whiting), சங்கரா (Threadfin bream), நகரை (Indian goatfish), கெளுத்தி (Sea catfish) மற்றும் சீலா (Barracuda) உள்ளிட்ட பொதுமக்கள் விரும்பி உண்ணும் பிரபலமான மீன் வகைகளின் தசை திசுக்கள் மற்றும் கடல் படிமங்களை ஆய்வு செய்ததில், நான்கு இடங்களிலும் அபாயக் குறியீடு (Hazard Index) 1-ஐ விட அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

படகு வண்ணப்பூச்சுகள் (Boat paints), கழிவுநீர் கலப்பு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் கடல் படிமங்களில் சேரும் இந்த நச்சு உலோகங்கள், குறிப்பாக ஆழ்கடல் தரைப்பகுதியில் வாழும் மீன்களில் அதிகமாகப் படிகின்றன. இத்தகைய ஈயம் கலந்த மீன்களைத் தொடர்ந்து உண்பதால் சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, செரிமானக் கோளாறுகள், மரபணு (DNA) சிதைவு மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு பெரியவர்களுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்படக்கூடும் என்றும் மருத்துவ நிபுணர்களும் ஆய்வாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments