Monday, March 16, 2026
HomeUncategorizedநடிகர் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

நடிகர் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் புனித் ராஜ்குமார். நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். அவரது இந்த மரணம், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், கன்னட மக்களை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டது. புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments