Sunday, March 8, 2026
HomeUncategorizedஓடிடி தளங்கள் நல்லது தான் - நடிகர் விஷ்ணு விஷால்.

ஓடிடி தளங்கள் நல்லது தான் – நடிகர் விஷ்ணு விஷால்.

ஓடிடி தளங்கள் நல்லது தான் என நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்…. இன்று முதல் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள FIR திரைப்படத்தின் குழுவினர் இயக்குனர் மனோ ஆனந்த், நடிகர் விஷ்ணு விஷால், நடிகை ரெபா மோனிகா ஆகியோர் கோவை தனியார் திரையரங்கிற்கு பார்வையிட வருகை புரிந்து இருந்தனர்.

தொடர்ந்து அங்குள்ள பார்வையாளர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு ல்பேட்டியளித்த நடிகர் விஷ்ணு விஷால் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

கொரோனாவிற்கு பிறகு பொதுமக்கள் திரை அரங்கிற்கு வருகை புரிவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.இந்த படத்தில் மதத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் எதுவும் செய்யவில்லை எனவும் சிலர் அதனை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

ஓடிடி தளத்தை பொறுத்தவரை திரையரங்குகளுக்கு மாற்றாக அமைந்துள்ளது. அதில் பல்வேறு திரைப்படங்கள் வெளியிடப்படுவது நல்லது தான் எனினும் திரையரங்கிற்கான வரவேற்பு என்றும் குறையாது என்றார்.என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது வியாபாரம் தான் என கூறிய அவர் அதனை கமர்ஷியலாக இருக்கும் பொழுது சில நெகடிவ் விமர்சனங்கள் வருவது இயல்புதான் என்றும் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments