Thursday, March 5, 2026
HomeUncategorizedதிருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அம்மன் கருவறை முன்பு நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்யும் புகைப்படம் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட பொது செயலாளர் இரா.அருண்குமார் கூறும்போது, “கடவுள் முன்பு அனைவரும் சமம். யாராக இருந்தாலும், கருவறை முன்பு புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.

கருவறை முன்பு புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. புகைப்படம் எடுத்தவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்” அப்படீன்னார் இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன் கூறும்போது,

“அண்ணாமலையார் கோயிலில் அம்மன் சன்னதி முன்பு நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்வதுபோன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது குறித்து எனது கவனத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” ன்னார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments