Friday, March 13, 2026
HomeUncategorizedமக்கள் நாயகன் ராமராஜன் 62ஆவது பிறந்த தினம்

மக்கள் நாயகன் ராமராஜன் 62ஆவது பிறந்த தினம்

தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் நடிகர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுசர் மட்டுமே போட்டு வந்து தன் படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்த பெருமைக்கு சொந்தக்காரர் ராமராஜன்.

1986ம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் ராமராஜன். கிராமிய கதைகளாக நடித்து வந்த ராமராஜனுக்கு கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த கரகாட்டக்காரன் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அப்படம் வருட கணக்கில் தியேட்டர்களில் ஓடியது. தொடர்ந்து அவரின் பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடின.

அதோடு எம்ஜிஆர் பாணியில் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று தொடர்ந்து உறுதியாக இருந்து வந்ததால் ஹீரோ மார்க்கெட் டல் அடித்த பிறகு தேடிச்சென்ற கேரக்டர் வேடங்களில் நடிக்க மறுத்தார் ராமராஜன்.

இந்த நிலையில் 2001ம் ஆண்டு ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்த ராமராஜன், அரசியலில் சிலகாலம் பயணித்தார். 2012ம் ஆண்டில் மேதை என்ற படத்தில் நடித்தவர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சில படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க முயன்று வாரார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments