பெங்களூருவில் ஐபோன் உற்பத்தி ஆலை!.. எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் உற்பத்தியில் இந்தியா பெரிய அளவில் கோலோச்ச தொடங்கியுள்ளது. இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தியாளர் ஆன பாக்ஸ்கான், இந்தியாவில் தனது இரண்டாவது பெரிய உற்பத்தி ஆலையை பெங்களூருக்கு அருகில் உள்ள தேவனஹள்ளியில் திறக்க உள்ளது.
ரூ.25,000 கோடி அதாவது (2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதலீட்டில் அமைக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலை புதிய ஐபோன் ரகமான 17 வகை போன் உற்பத்தியை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சென்னையில் பாக்ஸ்வான் நிறுவனம் தனது ஆலையை அமைத்து ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிலையில், இது அதன் கூடுதல் ஆலையாக அமைகிறது. இதன் மூலம் ஐபோன் உட்பட மின்னணு பொருட்கள் உற்பத்தியில் உலகின் முக்கிய நிலையில் இந்தியா உயர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.