சென்னையில் நேற்றைய தினம் கடும் வெயில்

சென்னை மீனம்பாக்கத்தில் 108.86 டிகிரி பாரன்ஹீட், வேலூரில் 107.92, புதுச்சேரியில் 106.16, மதுரையில் 105.44, ஈரோட்டில் 105.08, திருச்சியில் 104.54. கடலூரில் 104, காரைக்காலில் 100.94, திருமபுரியில் 100.4 வெயில் கொளுத்தியது.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு வழக்கத்தை விட வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்னும் செய்தி பலருக்கு சூடான செய்தியாக அமைந்துள்ளது.
அதே நேரத்தில் அதிகளவு வெப்பம் தாங்க முடியாத நிலை, மயக்கம் உள்பட பல்வேறு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.