Skip to main content

சபரிமலை பம்பா: உலக ஐயப்ப சங்கமத்தை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் பினராயி விஜயன்!

சபரிமலை பம்பாவில் இன்று உலக ஐயப்ப சங்கமத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.

இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சர் வி.என். வாசவன் தலைமையில் நிகழ்ச்சி தொடங்குகிறது. மாலை 4 மணி வரை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

உலகளாவிய ஐயப்ப சங்கமத்தில் 3000 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.  வெளிநாடுகளில் இருந்து 4864 பக்தர்கள் உலகளாவிய ஐயப்ப சங்கத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். 

இவர்களில், 3000 தேர்வு செய்யப்பட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டது. 
இதற்காக ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மாண்டமான குளிரூட்டப்பட்ட அரங்கு உருவாக்கப்பட்டுள்ளது

சபரிமலையில் உள்கட்டமைப்பு மேம்பாடு  முக்கிய விவாதப் பொருளாக இருக்கும். சபரிமலையின் வளர்ச்சிக்காக ரூ.1,300 கோடி மதிப்பிலான மாஸ்டர் பிளான் திட்டங்கள் முன்வைக்கப்படும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆதரவாளர்களைக் திரட்டுவது கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

சங்கமத்தை ஒட்டி பம்பை மற்றும் சபரிமலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்