டெல்லி காற்று மாசு: டெல்லியை விட்டு வெளியேற அறிவுரை!
டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள என்சிஆர் பகுதியில் காற்று மாசு நிலை மிக மோசமாக மாறியுள்ளது. தற்போது காற்று மாசு விகிதம் 301-400 என்ற மிகவும் மோசமான நிலையில் உள்ளது,. இதன் காரணமாக, நுரையீரல் பிரச்சனைகள் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை அதிகரித்துள்ளன. இந்த நிலைமை, ஏற்கனவே நுரையீரல் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது.
குறிப்பாக, 6-8 வாரங்கள் டெல்லியை விட்டு வெளியேறுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம், இந்த ஆண்டு இறுதி வரை காற்று மாசு நிலை மேலும் மோசமாகி, மேலும் ஆபத்தானதாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் என நுரையீரல் மருத்துவர்கள் தெரிவித்து டெல்லியை விட்டு வெளியேறுங்கள் என அறிவுரை கூறியுள்ளனர்.