பர்சனல் தகவல்களை பகிராதீர்கள்- எச்சரிக்கை தந்த Chat GPT சாம் அல்ட்மன்!
தனிப்பட்ட விஷயங்களை சாட் ஜிபிடியிடம் தந்தால், தனிநபர் மீதான வழக்கு விசாரணைக்கு அவரது சாட் ஜிபிடி உரையாடல்கள் அனைத்தையும் காவல் துறையிடம் நாங்கள் தர வேண்டும் என்பதை மறந்து விட வேண்டாம் என சாம் அல்ட்மன் எச்சரித்திருக்கிறார்.
இதையெல்லாம் முன்பே சொல்லியிருக்க வேண்டும் ! உலகின் பாதி தனிநபர் ரகசியங்கள் தன் வசம் வந்தபின் சொல்லி ஒரு பிரயோசனம் இல்லை ! சரி ! பூனைக் குட்டி இப்போதாவது வெளியே வந்ததே, ஆக நீங்கள் வம்பு வழக்கில் சிக்கிக் கொண்டால் என்றா கண்ணு பாத்தே எனக் கேட்காமலே சாட் ஜிபிடி நீங்கள் கையைப் பிடித்து இழுத்ததாக கோர்ட் ஏறி சொல்லி விடும். ஆகவே உங்கள் தகவல்களை டெலீட் செய்ய விரும்பினால்,
உங்கள் தனிப்பட்ட தகவல்களை டெலீட் செய்ய -
Settings --- Personalization--- Manage Memories - Click Manage - Delete All
உங்கள் உரையாடல்களை டெலிட் செய்ய விரும்பினால்
Settings --- Data controls--- Delete All Chats -- Delete All
சரி இதை செய்தால் சாட் ஜிபிடி அனைத்தையும் மறந்து விடுமா என்றால் உங்களை வைத்து அது கற்றுக் கொண்ட பயிற்சியை மறக்காது. இந்த திருட்டு முழியை எங்கியோ பாத்திருக்கன் எசமான், சரியா நியாபகம் வர மாட்டேங்குது எனத் தோரயமாக அடித்துத் துவைக்கும்.