Skip to main content

போலி அடையாள அட்டையுடன் நுழைந்த மர்ம நபர் கைது.. தொடரும் விசாரணை!

அக்தர் குத்புத்தீன் ஹுசைனி என்ற பெயர் கொண்ட நபர், மும்பையின் வெர்சோவா பகுதியில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் போலி அடையாள அட்டையுடன் வந்துள்ளார்.

சந்தேகம் அடைந்த தொழிற் பாதுகாப்பு படையினர், அவரை நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது முன்னுக்கு பின்னாகப் பதில் அளித்ததால் அந்த நபரை மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அக்தர் குத்புத்தீன் ஹுசைனி போலி அடையாள அட்டையுடன் அணு ஆராய்ச்சி மையத்தில் நுழைந்தது தெரியவந்தது.

மேலும் அவரிடமிருந்து அணு தொடர்பான ஆவணங்களும், 14 வரைபடங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 2004-ஆம் ஆண்டு துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டிருந்த ஹுசைனி, பிறகு போலி பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி துபாய், தேஹ்ரான் உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் செய்ததாகத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஹுசைனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.