Skip to main content

பஞ்ச துவாரகா: சுற்றுலா ரயில் நவம்பர் 25ம் தேதி முதல் முதல் இயக்கம்!

கிருஷ்ணரின் அவதார வாழ்வின் ஐந்து முக்கிய நிலைகளை காணும் வகையில் 'பஞ்ச துவாரகா' சுற்றுலா ரயில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 25ம் தேதி இயக்கப்படுகிறது.

அங்கிருந்து புறப்பட்டு, கோவை போத்தனுார், மதுரை, ஈரோடு, சேலம், சென்னை வழியாக அந்த ரயில் குஜராத் செல்லும்.

பின், அங்குள்ள துவாரகா, டாகோர் துவாரகா, நாத்துவாரகா, பெட் துவாரகா மற்றும் ராஜஸ்தானில் உள்ள கன்க்ரோலி துவாரகா என பஞ்ச துவாரகைகளை தரிசிக்கலாம். சர்தார் வல்லபபாய் படேலின் ஒற்றுமை சிலை, ஸ்ரீ ராமானுஜரின் சமத்துவ சிலையையும் பார்க்கலாம்.