Skip to main content

"ஏன்னா நீ என் நண்பன்"!தளபதி படம் ரிலீஸான தினமின்று!

சில சினிமாக்களை எம்புட்டு  தபா பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அந்த வரிசையில் இருக்கும் படங்களில் ஒன்று ரஜினிகாந்தின் தளபதி படம்.மணிரத்னம் டைரக்‌ஷனி  ரஜினிகாந்த் & மம்முட்டி  ஆக்டில் உருவான இப்படம் போன  1991 -ம்  வருசம் இதே நவம்பர் 5இல்   வெளியாகி மெஹா ஹிட் அடிச்சுது. 

கொஞ்சம் டீடெய்லா சொல்றதானா மிகச் சில திரைப்படங்கதான், பூஜை  போட்ட நாளிலிருந்து ரசிகர்கள்   மத்தியில்  எக்கச்சக்க  எதிர்பார்ப்பை உருவாக்கும். அதுக்கு ஏகப்பட்ட ரீசன்கள் இருந்தாலும்  பகுத்தறிய முடியாத காரணங்களும் அதன் பின்னால்  ஒளிஞ்சிருக்குது .  ஏற்கெனவே சூப்பர் ஸ்டாராகியிருந்த ரஜினியை ஒரு கடவுள் உருவாக மாற்றிய ‘தளபதி’ படத்துக்கும் அப்படியான எக்பெக்ட்டிசன் முன்பே உருவாகி போச்சு. மகாபாரதக் கதையைச்  நிகழ் கால கதையா மாத்தி இருக்கார் மணிரத்னம் அப்படீங்கற  நியூஸ் முன்பே வெளியாச்சு . ரஜினி கர்ணன் அப்படீன்னும், மம்மூட்டி துரியோதனன்  மற்றும்  அரவிந்தசுவாமி அர்ஜுனன் - ம்  கேரக்டர்ஸ் ஏற்கனவே ரசிகர்கள் மனதில் உருவாக்கப்பட்டுடுச்சு . அடிசினலா  ரஜினி முதல்முதலா இப்படத்திற்காக ஒரு கோடி ரூபாயைச் சம்பளமாக வாங்கிப்புட்டார் என்றும் தகவல்கள் வெளியாச்சு. இப்படத்தின் பூஜை அன்னிக்கே  ரஜினி, இளையராஜா, மம்மூட்டி மூவருக்கும் வீரவாள் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டுச்சு .  பின்னர் பனியன்கள், தொப்பிகள், கீ செயின்கள் ஆகியவை இப்படத்தின் பெயரில் வெளியாச்சு. தளபதி பெயர், சம்பிரதாய எழுத்துருக்களைப் பயன்படுத்தாமல் நவீன வடிவத்தில் எழுதப்பட்டுப் பெரும் வரவேற்பையும் பெற்றுச்சு.

Thalapathy

ஏ.ஆர். ரஹ்மான்  என்ற நேமுக்கு  முன்னதா உலகம் அதிக அளவில் கேட்ட தமிழ் பாடல் ‘ராக்கம்மா கையத் தட்டு’வாகத்தான் இருந்துச்சு . இந்தப் படத்தில் இளையராஜா ஒரு புதிய துள்ளலைச் சாத்தியப்படுத்தியிருந்தார். பி.பி.சி. நிறுவனத்தினர் அக்காலத்தில் நடத்திய ஒரு  கருத்துக்கணிப்பில், டாப் 10 வரிசையில் உலகெங்கும் கேட்கப்படும் பாடல் என்ற அந்தஸ்தை ராக்கம்மா கையத்தட்டு  வாங்கிச்சுது. மித்தாலி என்ற பாடகி பாடிய ‘யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே’ பாடலும் படம் வருவதற்கு முன்பே ரொம்ப பரவிச்சு . ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலும் அது உருவாக்கிய காட்சிகளும், உணர்வலைகளும் இளையராஜாவின் பாடல்களில் அழியாப் புகழ் கொண்டவை.

கர்ணன் கேரக்டர், சிவாஜி  மூலமா  அகலாத நினைவாக ஏற்கனவே தமிழகத்தில் சினிமா ரசிகர்கள் மனதில் நின்னுச்சு. இது ரஜினி  கமிட் ஆன கதாபாத்திரத்துக்குக் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்துச்சு. அடிசினலா ரஜினி, அரசியலுக்கு வருவார் அப்படீங்கற  ஆரூடங்களும் தளபதியைச் சுற்றிய காலகட்டத்தில்தான்தான் உருவாகத் தொடங்கிச்சு. அப்போ மிகப் பெரிய நாயக வெற்றிடம் சமூகத்திலும் உருவாகியிருந்துச்சு. எம்.ஜி.ஆரின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடம் அது. நேற்றைய மனிதன், இன்றைய தளபதி, நாளைய மன்னன்  -மாதிரியான சுவரொட்டிகள் ரஜினியின் அரசியல் தலைமையை எதிர்பார்த்து ரசிகர்களால் ஒட்டப்பட்டுச்சு.

இம்புட்டு எதிர்பார்ப்புகளோடு 1991ஆம் வருசம்  தீபாவளி அன்னிக்கு ரிலீஸான  தளபதியின் முதல் காட்சி அதிகாலை 3 மணிக்குத் திரையிடப்பட்டுச்சு. அடுத்தடுத்துக் கிட்டத்தட்டப் பத்து, பதினைந்து நாட்கள் தமிழ்நாடு  முழுக்க காலை 5 மணிக்கே முதல் காட்சியைத் தொடங்கிய சினிமாவும் தளபதிதான். காலையில்  ஸ்பெஷல் கிளாஸ் -நு  ஸ்கூலுக்கு குக் கிளம்பிப் போவதுபோலக் கிளம்பி, படம் பார்த்துட்டு ஒன்பது மணிக்கே பள்ளிக்கு மாணவர்கள் வந்தாய்ங்க.

தளபதி வெளிவந்த அதே தீபாவளி அன்னிக்குதான் முன்னர் சொன்ன கமலஹாசனின் குணாவும் வெளியாச்சுது. அந்த்ஹ குணா படம் அக்காலகட்டத்தில் பெரிய தோல்வியை அடைஞ்சுது. தளபதியும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலை -னுதான் விமர்சகர்களால் குறிப்பிடப்படுது. தளபதி படத்தில் ரஜினி போலீஸ்காரர்களைத் திரும்பத் தாக்காமல் சித்திரவதைக்குள்ளாவதையும், காதலியை இன்னொருவரிடம் இழப்பதையும் ரசிகர்கள் விரும்பலை  அப்படின்னு  காரணம் கூறப்பட்டுச்சு.

என்றாலும் தளபதி முக்கியமான ஒரு நிகழ்வு. சிறந்த இந்திய வெகுஜனச் சினிமா, மகிழ்ச்சி, துக்கம், கேளிக்கை, துய்ப்பு, எல்லாமும் சேர்ந்த திருவிழாத் தன்மை கொண்டது.