சபரிமலையில் துவார பாலக சிலைகளில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை பழுதுபார்க்கும் பணிகள் தொடரலாம்- உயர் நீதிமன்றம் அனுமதி!
சபரிமலை சன்னிதானத்தில் உள்ள துவார பாலக சிலைகளில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை பழுதுபார்க்கும் பணிகளை தொடரலாம் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முலாம் பூசுவதற்கு எவ்வளவு தங்கம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த பதிவுகளையும் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
முன்னதாக, சபரிமலையில் இந்த தகடுகள் நீதிமன்றத்தின் அனுமதியின்றி பழுது பார்ப்பதற்காக அனுப்பப்பட்டது சரியல்ல அவை திரும்ப கொண்டு வரப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகள் சேதமடைந்ததால்தான் l பழுது பார்ப்பதற்காக அனுப்பப்பட்டது.
அதுவும் உரிய நடைமுறைகளின் படி ஆபரணத்திற்கான நீதிமன்ற ஆணையர் உத்தரவு படியே அனுப்பப்பட்டது . அதை திருப்பி அனுப்ப இயலாது என்றும் நீதிமன்றத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவித்தார்.
மலையாள மாதமான கன்னியின் மூன்றாம் நாளில் சுத்திகரிப்பு சடங்குகள் நடத்தப்பட்டு தங்கம் முலாம் பூசப்பட்ட தகடுகள் துவார பாகலர் சிலையில் பொருத்தப்படும் என்றும் பிரசாந்த் தெரிவித்தார்.