Google நிறுவனத்துக்கு ரூ.300 கோடி அபராதம் விதிப்பு!
ஆஸ்திரேலியாவில் Google நிறுவனம் டெல்ஸ்ட்ரா மற்றும் ஆப்டஸ் ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அவர்கள் விற்பனை செய்த ஆண்ட்ராய்டு போன்களில் Google தேடுபொறி (search engine) மட்டும் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை வைத்தது.
இதனால் போட்டி தேடுபொறிகள் (Competitive search engines)தடையடைந்தன. பதிலுக்கு இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் கூகுளின் விளம்பர வருவாயில் ஒரு பங்கை பெற்றன. இந்த ஒப்பந்த நுகர்வோர் தேர்வை குறைத்து போட்டியை தடை செய்கிறது(reduces consumer choice and hinders competition.) எனக் கூறி ஆஸ்திரேலியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் முடிவில் Google நிறுவனத்திற்கு ரூ.315 கோடி அதாவது (36 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அபராதம் விதிக்கப்பட்டது.