Skip to main content

திருப்பதியில் இனி வரிசையில் நிற்க வேண்டாம்.. உடனடியா பெருமாளை தரிசனம் செய்யணுமா? இதோ சூப்பர் வழி!

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் ஏன், பல நாட்கள் கூட காத்திருக்க வேண்டி இருக்கிறது. குழந்தைகள், வயதானவர்கள் என்று பலரும் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் அவர்களுக்காகவே இப்போது சூப்பரான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம். டிக்கெட் வாங்கிய சில மணி நேரங்களிலேயே பெருமாளை தரிசனம் செய்ய சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளது. டிக்கெட் எங்கே வாங்கலாம்? எப்பொழுது சுவாமி தரிசனம் செய்யலாம்? பிரசாதங்களை எங்கே பெறலாம்? யார் யாருக்கு இந்த சலுகைகள் செல்லும் என விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அன்னமய பவன் என்ற ஹோட்டலுக்கு எதிரே ஸ்ரீ வாணி டிரஸ்ட் விஐபி பிரேக் தரிசனம் (ஸ்ரீ வாணி தர்ஷன் டிக்கெட் கவுண்டர்) என்ற இடத்தில் டிக்கெட்டுகள் பெறலாம். அதற்கான கூகுள் லொகேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. https://share.google/1J8sgjL8s9XZdQ3Mo

விதிமுறைகள்: 

1. மேற்கண்ட டிக்கெட்டுகளுக்கான டோக்கன் தினமும் காலை 4.30 மணி முதல் கிடைக்கும். ஒரு டிக்கெட்டுக்கு Rs.10,500/- (11 வயது முதல் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும்) . 

2. மாலை 4.30 மணிக்கு சுவாமி தரிசனம் செய்யலாம். சன்னதியில் வரிசை தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்படாது .. பெருமாளுக்கு மிக அருகில், தரிசனம் செய்ய முடியும். 

3. ஆதார் அட்டை கட்டாயம். 1 முதல் 800 வரை வரிசை எண்ணுடன் ஜெராக்ஸ் சீல் செய்யப்படும். 

4. காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணிக்கு முன்பு வரை அதே இடத்தில், ஆதார் ஜெராக்ஸ் சீல் செய்யப்பட்ட அதே இடத்தில் UPI மூலமாகவோ, பணமாகவோ அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்திய பிறகு டிக்கெட்டுகள் சேகரிக்கப்படும்.

5. எந்த நேரத்திலும் செக்கிங் வருவார்கள் என்பதற்காக, அசல் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும்.

6.இந்த செயல்முறை TTD-யின் சோதனை முயற்சி மட்டுமே, இது ஆகஸ்ட் 15, 2025 வரை மட்டுமே பொருந்தும். இது ஆகஸ்ட் 25, 2025 க்குப் பிறகு மாற்றத்திற்கு உட்பட்டது

தினசரி 1000 டிக்கெட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 200 டிக்கெட்டுகள் ரேணிகுண்டா விமான நிலையத்தில் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது . மீதம் உள்ள 800 டிக்கெட்டுகள் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து வழங்கப்படும். ஏஜென்ட் மூலமாக டிக்கெட் விற்பனை செய்ய மாட்டாது.