Skip to main content

நவீன வசதிகளுடன் ஜெலோ நைட் பிளஸ் ZELO KNIGHT PLUS!

 ஜெலோ எலக்ட்ரிக் நிறுவனம் புதிய ஜெலோ நைட் பிளஸ் (ZELO KNIGHT PLUS) என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.8 கிலோ வாட் ஹவர் எல்.எப்.பி பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதை தனியாக கழற்றி எடுத்துச் சென்று சார்ஜ் செய்து கொள்ளலாம். முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். இதில் 1.5 கிலோ வாட் மோட்டார் உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

 ஹில் ஹோல்ட் அசிஸ்ட், குரூஸ் கண்ட்ரோல், பாலோ-மீ-ஹோம், ஹெட் லாம்புகள், யூஎஸ்பி சார்ஜ் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன .ஷோரூம் விலை சுமார் ரூ.59,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.