Home உலகம் தந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய மகள்!- பின்னணியில் உள்ள சுவாரஸ்ய கதை!

தந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய மகள்!- பின்னணியில் உள்ள சுவாரஸ்ய கதை!

தந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய மகள்!- பின்னணியில் உள்ள சுவாரஸ்ய கதை!

– மு.பழனிவாசன்

இந்த உலகம் விசித்திரமானது. இங்கே மனிதர்களின் வாழ்வியல் பல சந்தர்ப்பங்களில் உணர்ச்சிப் பூர்வமானது.

இந்த ஓவியம் நம் கலாச்சாரக்கண் கொண்டு நோக்கும் போது நிச்சயம் கொச்சையான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னணியில் உள்ள கதையானது பாசத்தினால் பண்பட்டநிலத்தின் ஒரு பண்புக்கூறு.


பிரான்ஸ் தேசத்தில் பதினான்காம் லூயிஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெர்ற ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஒரு ஏழைமனிதன் ஒரே ஒரு ரொட்டிதுண்டினை திருடியதால் கையும் களவுமாக காவலர்களிடம் பிடிபடுகிறான். ”பட்டினியால் உயிர் பிரியும் தண்டணை” அதாவது “சாகும்வரை பட்டினி” என்கிற தீர்ப்பு வழங்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படு விடுகிறான்.


ஆனால், அவனுக்கு ஒரு சலுகை வழங்கப்படுகிறது. அது என்னவென்றால், தினம் ஒருமுறை அவனது மகள் அவனை ஒரு பார்வையாளராக சந்தித்துச்செல்லாம் என்கிற விசேஷ அனுமதி கிட்டுகிறது. அவ்வாறு அவள் வரும்போது சிறைக்காவலர்கள் அவளை முழுமையாக சோதனையிடுவர். காரணம், தன் தந்தைக்கு அவள் உணவு ஏதும் கொண்டு செல்லக்கூடாதல்லவா? அவளும் உணவுப்பொருட்கள் எதையும் கொண்டுவருவதில்லை. தன் குழந்தையுடன் வருவாள். தந்தையை சந்திப்பாள். சென்றுவிடுவாள். இதுவே
வாடிக்கையாகி விடுகிறது.


நான்கு மாதங்கள் கழிந்தும், சிறையிலிருந்த அந்த ஏழை மனிதன் உயிர்பிரியாமல், நல்ல திடகாத்திரமாகவும், எடை குறையாமலும் இருக்கிறான். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஏதோ பொறிதட்டியது. ஒருநாள் அவர்கள் ஒரு முடிவிற்கு வந்து, அந்த பெண் தன் தந்தையை சந்திக்கும் நிகழ்வை மறைந்திருந்து கண்காணிக்கின்றனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை உறைய வைக்கிறது. அதாவது, அவள் தன் குழந்தைக்கு ஊட்ட வேண்டிய தாய்ப்பாலை சிறைக்கம்பிகள் வழியே தன் மார்பகத்திலிருந்து நேரிடையாக அவள் தந்தை அருந்தும் வகையில் நிற்கிறாள். அந்த தந்தை
குழந்தையைப்போல் சப்பிக்குடிக்கிறான்.

இதுபற்றி நீதித்துறைக்கு செய்தி செல்கிறது. அந்தப் பெண் தன் தந்தையின் மீதுள்ள இரக்கத்தையும் அன்பையும் உணர்ந்த நீதிபதிகள், அவளின் பாசத்திற்கு மரியாதை செய்யும்விதமாக அவள் தந்தையை மன்னித்து அவனை விடுதலை செய்ய உத்தரவிட்டனர். சிறைச்சாலையில் ”தந்தைக்கு பாலூட்டும் மகள்” ஓவியம் 30 மில்லியன் யூரோக்களுக்கு விற்கப்பட்டதாக அறியப்படுகிறது.

– மு.பழனிவாசன்

Exit mobile version