Thursday, February 5, 2026
Homeசெய்திகள்மனைவியுடன் தகராறு.. மாமியார் கையை துண்டாக வெட்டியவர் கைது!

மனைவியுடன் தகராறு.. மாமியார் கையை துண்டாக வெட்டியவர் கைது!

 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெடும் பாறையைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவருடைய மனைவி தங்கமணி வயது 45. இவர்கள் தற்போது கோவை சுந்தராபுரத்தில் வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் நந்தினி. இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆறு வயதில் மகன் உள்ளார். 

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். இதனை அடுத்து நந்தினி மூன்று ஆண்டுகளுக்கு முன் நெடும்பாறையைச் சேர்ந்த கள் இறக்கும் தொழிலாளியான ரவி (36) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

 ஒரு வாரத்திற்கு முன் நந்தினி கணவரிடம் கோபித்துக் கொண்டு கோவையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தின இரவு நந்தினி நெடும்பாறையில் கணவர் வீட்டுல் உள்ள துணிகளை எடுப்பதற்காக தனது தாய் தங்கமணியுடன் வந்தார். அப்போது வீடு பூட்டி இருந்தது. இதனால் ரவியை அழைத்து, வீட்டு சாவியை கொண்டு வருமாறு கூறியுள்ளார். 

இதை தொடர்ந்து ரவி வீட்டுக்கு வந்து சாவியை கொடுத்தார். உடனே வீட்டுக்குள் சென்ற நந்தினி துணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அவருக்கு அருகில் சென்ற ரவி, இனிமேல் சண்டை போடாமல் வாழ்கிறேன் என்று சமாதானம் பேசியதாக கூறுகின்றனர். இது தொடர்பாக அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.  

அப்போது வீட்டின் கதவின் மேல் வலது கையை வைத்தபடி மாமியார் தங்கமணி நின்று கொண்டிருந்தார். அப்போது பயங்கர ஆத்திரத்தில் இருந்த ரவி அறிவால் எடுத்து தங்கமணியின் வலது கையை துண்டாக வெட்டினார். இதனால் ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த தங்கமணியை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். (துண்டிக்கப்பட்ட கையை ஒரு பிளாஸ்டிக் கவரில் எடுத்துக் கொண்டு சென்றனர்.)

 பொள்ளாச்சியில் முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு தங்கமணியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புகாரின் அடிப்படையில்  பொள்ளாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியார் கையை துண்டாக வெட்டிய ரவியை கைது செய்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments