Sunday, March 22, 2026
Homeசெய்திகள்ஹாய்! நானும் குளிக்க வரட்டுமா? பாத்ரூமை எட்டிப்பார்த்த புலி.. ஷாக்!

ஹாய்! நானும் குளிக்க வரட்டுமா? பாத்ரூமை எட்டிப்பார்த்த புலி.. ஷாக்!

புலி என்றாலே அனைவருக்கும் ஒரு பயம் இருக்கத்தான் செய்யும். காட்டில் குறைந்தபட்சம் 100 அடி தூரத்தில் இருந்து தான் புலியை பார்க்க முடியும். அந்த அளவு  தூரத்தில் இருந்து பார்க்கும்போதே அனைவர்க்கும் ஒரு விதமான பயம் ஏற்படும். அதுவே நம் அருகில் இருந்தால் எப்படி இருக்கும்?  பக்கத்தில் பார்ப்பது மட்டுமில்லாமல் நீங்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது  புலி எட்டிப் பார்த்தால்? யோசித்துப் பாருங்கள். 

இதுபோல ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது. வடமாநிலத்தில் வாலிபர் ஒருவரின் வீடு காட்டுப்பகுதி ஓரத்தில் அமைந்து இருக்கிறது.அந்த வாலிபர் குளியலையில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த புலி ஒன்று குளியலறை ஜன்னல் வழியாக தனது தலையை நுழைத்துக் கொண்டு எட்டிப் பார்த்துள்ளது. இதை பார்த்ததும் பயத்தில் வாலிபருக்கு பேச்சே வராமல் ஷாக்கில் உறைந்து போயுள்ளார். புலி அவரை கண் கொட்டாமல் பார்த்துள்ளது. சிறிது நேரம் கழித்து தலையை வெளியே இழுத்து காட்டுக்குள் ஓடி உள்ளது. ஒரு சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments