நாதஹாரம் சேவா ட்ரஸ்ட் சமர்ப்பித்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் தத்ரூப திருவுருச்சிலை ..
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக போற்றி வணங்கப்படும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் அவதார திருநாள் வருடந்தோறும் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் மிகசிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆந்திர ஆந்திர மாநிலம் மந்திராலயத்தில் அவர் பிருந்தாவனத்தில் இந்த விழா மிக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த வைபவத்தில் சென்னை நாதஹாரம் சேவா ட்ரஸ்ட் கடந்த 22 வருடங்களாக பங்கேற்று தங்களால் இயன்ற நன்கொடை மற்றும் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு வருடம் முழுவதும் தேவைப்படும் தீவனங்களையும் வழங்குகின்றனர் . இந்த வருடம் இதற்கு மேலும் ஒரு மணிமகுடமாக ஸ்ரீ ராகவேந்திரா சுவாமியின் திருவுருவச்சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு மந்திராலய மடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது .

மேலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் இசைப்பேரொளி DR.கணேஷ் அவர்களின் தலைமையில் சென்னை மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து இந்த வைபவத்தில் பங்கேற்று இசை சமர்ப்பணம் செய்தனர். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி பக்திப் பாடல்களை பாடி இசை அஞ்சலி செலுத்தினர் . இந்த வைபவத்தின் முத்தாய்ப்பாக திருவையாற்றில் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை உற்சவத்தை கண் முன் கொண்டு வந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து ராகவேந்திர சுவாமிக்கு இசை சமர்ப்பணம் செய்தனர். இதில் பங்கேற்ற ஸ்ரீ மடத்தின் தற்போதைய மடாதிபதி ஸ்ரீ சுபதீந்திர தீர்த்த சுவாமிகள் நாதஹாரம் குழுவினர் செய்யும் சேவைகளை குறிப்பிட்டு பாராட்டி அருளாசி வழங்கினார் .

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நாதஹாரம் சேவா ட்ரஸ்ட் குழுவின் முக்கிய நிர்வாகிகள் மதுரை ஸ்ரீ பாலசுப்ரமணியன் , ஸ்ரீ ராஜசேகர், வில்லிவாக்கம் திரு ரகுராமன் , திரு கண்ணன் ,திரு பூவராஹன் , திரு கணபதிராமன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து இருந்தனர் . இந்த நிகழ்வில் பங்கேற்ற 300 க்கும் மேற்பட்டோருக்கு தங்குமிடம் , உணவு ,ரயில் பயணம் உள்ளிட்டவை அனைத்தும் திட்டமிட்டு சிறப்பாக செய்யப்பட்டது .
இந்த நிகழ்வில் உறுதுணையாக இருந்த இசைக்கலைஞர்கள் திருமதி தீபா கணேஷ் ,ராஜீவி கணேஷ் , குரு ராகவேந்திரா ,ஸ்ரீ ராம் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பணி பாராட்டுக்குரியது.

