Friday, March 13, 2026
HomeUncategorizedஆதார் புதுப்பித்து கொள்வதற்கான காலக்கெடு

ஆதார் புதுப்பித்து கொள்வதற்கான காலக்கெடு

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்து கொள்வதற்கான காலக்கெடு டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. சமீபத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் தகவல்களை அப்டேட் செய்வது கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்தது. பொதுமக்களின் வசதிக்காக, மை ஆதார் போர்ட்டல் வழியாக, ஆதார் தகவல்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்வதற்கான அவகாசம் செப்டம்பர் 14ம் தேதியுடன் முடிவடைய இருந்தது.

இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 14ம் தேதி வரை மை ஆதார் போர்ட்டலில் ஆதார் தகவல்களை எளிதாக ஆன்லைனில் புதுப்பித்து கொள்ளலாம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments